கோலாலம்பூர், செப்டம்பர், 27:
கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 25) பண்டார் பாரு புக்கிட் ஜாலீல் உணவகத்தின் அருகே, இரண்டு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக, செராஸ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஜாம் ஹலீம் ஜமாலுடின் தெரிவித்தார்.
ஸ்ரீ ராக்யாட் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்த ஒரு பையில் குழந்தை காணப்பட்டதாக அவர் கூறினார்.
“சம்பவ இடத்திலிருந்த மருத்துவமனை கேன்சிலர் துவாங்கு முஹ்ரிஸ் (HCTM) மருத்துவப் பணியாளர்கள் குழந்தையை பரிசோதித்ததில், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்தது.
பின்னர் அக்குழந்தை புக்கிட் ஜலீல் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன” என்று அவர் செவ்வாயன்று (செப்.27) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 317ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
வழக்கு தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் செராஸ் காவல்துறையை 013 216 5881 என்ற எண்ணில் அல்லது அவர்களின் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.