இணையத் தளங்களில் TnG NFC அட்டைகள் ஐந்து மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை

புத்ராஜெயா, செப்.28 :

TnG NFC அட்டைகளை இணையத் தளங்களில் ஐந்து மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் (KPDNHEP) கண்டறிந்துள்ளது.

TnG NFC அட்டைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் அல்லது TnG பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் RM10 விலையில் விற்கப்படுகின்றன. எவ்வாறாயினும், இந்த அட்டைகளின் விற்பனை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வரையறுக்கப்பட்ட விநியோகத்தை மட்டுமே செய்ததாகக் கூறப்படுகிறது.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர், டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறுகையில், KPDNHEP இன் அமலாக்கப் பிரிவு இந்த விஷயம் தொடர்ப்பில் இதுவரை நான்கு அதிகாரப்பூர்வ புகார்களைப் பெற்றுள்ளது என்று கூறினார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், NFC TnG அட்டைகளின் விற்பனையில் (இணையத் தளங்களில்) பெட்ரோல் நிலையத்தின் கட்டண கவுன்டரில் உள்ள ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

“தனிநபர்கள் TnG NFC கார்டுகளை முதலில் RM10 விலையில் எந்த கிரெடிட்டும் இல்லாமல் இணைய சந்தை தளங்கள் மூலம் ஐந்து மடங்குக்கும் அதிகமான விகிதத்தில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இவ்வாறு இயங்கும் இணைய சந்தை தளங்களின் தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கு தொடர்பாக தனியார் குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் உட்பட மொத்தம் 11 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக நந்தா கூறினார்.

இதன்போது சம்மந்தப்படடவர்கள் உடனடியாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு பதிலளிக்கும் அறிவிப்புகள் வழங்கப்பட்டதாகவும், அவற்றுக்கு பதிலளிக்காத பட்ஷத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here