கொள்ளை வழக்கின் புகார்தாரரை போலீஸ் தேடுகிறது

கோலாலம்பூர், செப். 28 :

இங்குள்ள ஜாலான் துன் சம்பந்தன் என்ற இடத்தில், 2017-ம் ஆண்டு நடந்த கொள்ளை  வழக்கின் புகார்தாரர் விசாரணைக்கு உதவ முன்வருமாறு பிரிக்ஃபீல்ட்ஸ் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்று புதன்கிழமை (செப்டம்பர் 28) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், துணை அரசு வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரில், வங்காளதேசத்தைச் சேர்ந்த முகமட் காசி கம்ருல் எனப்படும் புகார்தாரரை தேடப்படும் நபராக அவர்கள் பெயரிட்டனர்.

BL 08857XX கடவுச்சீட்டு எண் கொண்ட புகார்தாரரின் கடைசி முகவரி 223, லெவல் 2 ஜாலான் துன் சம்பந்தன், கோலாலம்பூர் என்று கூறப்படுகிறது.

மேலும், விசாரணைக்கு உதவுவதற்காகவும், வழக்குப் பொருட்களைத் திருப்பித் தருவதற்காக முகமட் காசி தேடப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி ஆய்வாளர் யோ ஜூ பூன் என்பவரை 016 515 9755 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here