ஷா ஆலாம், செப்.30 :
இங்குள்ள கம்போங் புக்கிட் லாஞ்சோங்கில் நேற்று நண்பகல், பந்தை எடுக்க முயன்றபோது ஆற்றில் விழுந்ததாக நம்பப்படும் பதின்ம வயது சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சிலாங்கூர் தீயணைப்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், நேற்று மாலை சுமார் 4.56 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது, அதனைத்தொடர்ந்து மாலை 5.29 மணிக்கு தீயணைப்புக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.
அறிக்கையின்படி, 13 வயது சிறுவன் பந்தை எடுக்க முயன்றபோது, ஆற்றில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
“பாதிக்கப்பட் சிறுவன் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
தேடுதல் நடவடிக்கை உடனேயே ஆரம்பிக்கப்பட்டபோதிலும், இன்று காலை 8.21 மணியளவில் உயிரிழந்தவரின் சடலம், நேற்று அவர் விழுந்த இடத்திலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் மிதக்க கண்டெடுக்கப்பட்டது.
அடுத்த நடவடிக்கைக்காக “பாதிக்கப்பட்டவரது சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது ” என்று அவர் கூறினார்.









