கெடாவில் இதுவரை 883 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

அலோர் ஸ்டார், அக்டோபர் 1 :

கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, இந்தாண்டு கெடா முழுவதும் பதிவான டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 883 ஆக அதிகரித்துள்ளன, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 391 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.

மாநில சுகாதாரம் மற்றும் உள்ளாட்சிக் குழுத் தலைவர், டத்தோ டாக்டர் முகமட் ஹயாட்டி ஓத்மான் கூறுகையில், டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு 125.8 விழுக்காடு அதிகரிப்பை காட்டுவதுடன், இரண்டு இறப்புகளையும் உள்ளடக்கியுள்ளது என்றார்.

“கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, கெடாவில் 77 டிங்கி பரவும் பகுதிகள் பதிவாகியுள்ளன, அதில் 7 பகுதிகள் இன்னும் செயலிலுள்ளன என்று அவர் இன்று கோத்தோங் ரோயாங் மெகா 2.0 என்ற ஏடிஸ் கொசுவை ஆழிப்பதற்கான சிரமதான நிகழ்ச்சியில் சந்தித்தபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here