பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின், அலோர் ஸ்டார் பிரிவு தலைவர் யூசூப் ஆகியோர் அம்னோவில் இருந்து இடைநீக்கம்

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 1 :

பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் மற்றும் அலோர் ஸ்டார் அம்னோ பிரிவுத் தலைவர் டத்தோ முகமட் யூசுப் இஸ்மாயில் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) ​​இரவு அம்னோவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு நடைபெற்ற அம்னோ உச்ச மன்ற கூட்டத்தில் இவ்விருவரையும் இடைநீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அலோர் ஸ்டார் பிரிவு தலைவர் யூசூப் கூறுகையில், தமக்கு அதிகாரபூர்வ கடிதம் கிடைக்கவில்லை அத்தோடு நேற்றிரவு வாய்மொழியாக மட்டுமே தெரிவிக்கப்பட்டது, எனவே இதற்கான காரணம் தொடர்பில் தனக்கு தெரியவில்லை என்று கூறினார்.

பாசீர் சாலாக் அம்னோ பிரிவுத் தலைவரான தாஜூடினும், யூசூப்பும் அம்னோவின் உயர்மட்டத் தலைமைக்கு எதிராகச் செல்வதாக சந்தேகிக்கப்படுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் “நான் எந்தத் தவறும் செய்யாததால் மேல்முறையீடு செய்யமாட்டேன். அன்றும், இன்றும், என்றும் என்னை அம்னோவின் ஆதரவாளனாகவே கருதுகிறேன்,” என்று யூசூப்பைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

தாஜூடின் 2008 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை பாசீர் சாலாக் எம்.பி.யாக இருந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம், கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியை பதவி விலகுமாறு கருத்துரைத்ததால், அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

ஜூலை மாதம், இந்தோனேசியாவுக்கான மலேசியாவின் பெயரிடப்பட்ட தூதுவர் பதவியிலிருந்து தாஜூடின் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here