நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து அமைச்சரவையின் கருத்தை கேளுங்கள் என்றார் ஹம்சா

நடைபெறவுள்ள 15ஆவது பொதுத் தேர்தலுக்கு (GE15) நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அமைச்சரவையின் கருத்துக்களைப் பெற வேண்டும் என்று பெர்சத்து பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார். தேசிய முன்னணி (BN) அரசாங்கத்தில் மேலதிக்கக் கட்சியாக இருந்த காலத்திலிருந்து நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாக நிலைமை வேறுபட்டது என்பதால் உள்துறை அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த விவகாரத்தை அமைச்சரவை அமைச்சர்களுடன் விவாதித்த பிறகு (நாடாளுமன்றத்தை) கலைக்க பிரதமர் மாமன்னரை அறிவுறுத்தலாம் என்று அரசியலமைப்பு கூறுகிறது. ஆனால் சில தரப்பினர் அதற்கு முன்பு அப்படி இல்லை என்று கூறுகின்றனர்.

இது முன்னர் செய்யப்படவில்லை. ஏனெனில் (அரசாங்கத்தில்) தேசிய முன்னணி என்ற ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இப்போது அரசாங்கத்தில் பல (கட்சிகள்) உள்ளன. எனவே இது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அமைச்சரவையின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.  இன்று சபா மண்டல ‘Kita Demi Negara’ நிகழ்ச்சியின் நிறைவு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹம்சா இவ்வாறு கூறினார்.

வெள்ளிக்கிழமை கூடிய UMNO உச்ச கவுன்சில் GE15 இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தது. அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ அஹ்மட் மஸ்லான், அந்த முடிவின் அடிப்படையில், கூட்டாட்சி அரசியலமைப்பின் 40 (1) வது பிரிவின்படி மாமன்னருக்கு (நாடாளுமன்றம்) கலைக்கப்படுவதற்கான முன்மொழியப்பட்ட தேதியை பிரதமர் முன்வைப்பார் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here