கடத்தல் சிகரெட்டுகள், பட்டாசுகளுடன் 16 வயது தாய்லாந்து வாலிபர் கைது

கோத்தா பாரு, அக்டோபர் 2 :

ஒரு தண்ணீர் சுத்திகரிப்பான் பழுதுபார்க்கும் வளாகம், வரி செலுத்தப்படாத பல்வேறு வகையான சிகரெட்டுகளை சேமிக்கும் களஞ்சியமாக மாற்றப்பட்ட தந்திரம், நேற்று இரவு வெற்றிகரமாக போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 12.15 மணியளவில் பொது நடவடிக்கைப் படையின் 7வது பட்டாலியனால் ஜாலான் மருத்துவமனை வளாகத்தில் மேற்கொண்ட சோதனையில், 128,200 வெள்ளை சிகரெட்டுகள் மற்றும் பட்டாசுகளை கைப்பற்றப்பட்டதுடன் 16 வயது தாய்லாந்து சிறுவனை போலீசார் கைது செய்துள்ளதாக கிளாந்தான் காவல்துறைத் தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.

“வளாகத்தில் சோதனை நடத்தப்படுவதற்கு முன்பு, அவர்களின் புலனாய்வுக் குழு சம்பவ இடத்தில் கண்காணிப்பை நடத்தியது என்றார்.

அதனைத் தொடர்ந்து வீட்டைச் சோதனை செய்ததில், 15 கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்கள் மற்றும் ஒரு சாக்லேட் பெட்டி அடங்கிய ஒரு வெள்ளை பிளாஸ்டிக் சாக்கு பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது, அதில் பல்வேறு பிராண்டுகளின் 641 கார்டன் சிகரெட்டுகள் இருந்தன.

அவர் கூறியபடி, 1967 சுங்கச் சட்டம் பிரிவு 135 (1) (d) இன் படி விசாரணைக்காக சந்தேக நபர் அக்டோபர் 14 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here