கால்பந்து மைதானத்தில் கலவரம் – இந்தோனேசிய கால்பந்து கிளப்பிற்கு RM 70,000 மேல் அபராதம்

ஜகார்த்தா, அக்டோபர் 5 :

இந்தோனேசியாவின் மலாங்க் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 174 பேர் உயிரிழந்ததாகவும், 180-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கால்பந்து கிளப்பின் அதிகாரிகள் 2 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது என இந்தோனேசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

மேலும், அந்த கால்பந்து கிளப்பிற்கு மலேசிய மதிப்பில் சுமார் RM 70,000 மேல் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here