காஜாங்-சிரம்பான் விரைவுச்சாலையில் சொகுசு எஸ்யூவி வாகனம் விபத்துக்குள்ளாகி, தீயில் எரிந்து நாசம்

சிரம்பான், அக்டோபர் 6 :

இங்குள்ள காஜாங்-சிரம்பான் விரைவுச்சாலையின் (லேகாஸ்) KM26.2 இல் ஒரு சொகுசு விளையாட்டு பயன்பாட்டு வாகனம் விபத்துக்குள்ளாகி, திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அவ்வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது.

இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 6) நண்பகல் 1.30 மணியளவில் நடந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மன்டின்-சிரம்பான் பகுதியின் தெற்குப் பாதையில் சென்று கொண்டிருந்த போதே, குறித்த விளையாட்டு பயன்பாட்டு வாகனம் தீப்பிடித்தது என்றும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here