கினாபதங்கான்:
சபா மாநிலத்தின் கினாபதங்கான் (Kinabatangan) நாடாளுமன்றத் தொகுதி மற்றும் லாமாக் (Lamag) சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி (BN) வெற்றியைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கினாபதங்கான் தொகுதியில் BN வேட்பாளர் முகமட் குர்னியாவான் நைம் மொக்தார் (Mohd Kurniawan Naim Moktar), 12,426 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
லாமாக் தொகுதியில் BN வேட்பாளர் முகமட் இஸ்மாயில் ஆயோப் (Mohd Ismail Ayob), 3,689 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமான அம்னோ மூத்த தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் அவர்களின் மறைவைத் தொடர்ந்து இந்த இடங்கள் காலியானது குறிப்பிடத்தக்கது. தற்போது புங் மொக்தாரின் மகன் நைம் மொக்தார் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துள்ளார்.
இந்த வெற்றியை அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அஸ்ரப் வாஜ்டி தசுகி மற்றும் அம்னோ இளைஞர் அணித் தலைவர் டத்தோ டாக்டர் அக்மால் சாலே ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
























