இயல்பு நிலைக்கு திரும்பியது ஜோகூர் ; செயல்பாட்டிலிருந்த இரண்டு நிவாரண மையங்களும் மூடப்பட்டன

ஜோகூர் பாரு, அக்டோபர் 7 :

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஜோகூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருவதைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இயங்கிவந்த இரு நிவாரண மையங்களும் மூடப்பட்டன .

மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு (JPBD) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், கம்போங் சுங்கை லினாவில் இருந்து வெளியேற்றப்பட்ட 10 பேர் வீடு திரும்பியதை அடுத்து, இன்று காலை 10 மணிக்கு குளுவாங்கில் செயலிலிருந்த செக்கோலா கேபாங்சான் (SK) சுங்கை லினாவில் உள்ள நிவாரண மையம் மூடப்பட்ட்து மூடப்பட்டது.

போனதியானில் உள்ள மற்றைய நிவாரண மையமான SK ஸ்ரீ அனோம், இன்று நண்பகலில் மூடப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணிநேர கனமழையைத் தொடர்ந்து, குளுவாங் மற்றும் பொந்தியான் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அங்கிருந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க மேற்கூறப்பட்ட இரண்டு நிவாரண மையங்களும் திறக்கப்பட்டன என்று மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here