சிங்கப்பூரிலிருந்து திரும்பப் பெறப்பட்ட உடனடி நூடுல்ஸ்; அதே தொகுதி மலேசியாவில் இல்லை

எத்திலீன் ஆக்சைடு (ETO) இருப்பதால் சிங்கப்பூரில் திரும்பப் பெறப்பட்ட இரண்டு உடனடி நூடுல்ஸ் தயாரிப்புகள் மலேசியாவிற்கு கொண்டு வரப்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. Mie Sedaap இன் கொரியன் ஸ்பைசி சிக்கன் மற்றும் கொரியன் ஸ்பைசி சூப் சுவைகளை திரும்பப் பெறுவது குறித்து அமைச்சகத்திற்கு அறிவிக்கப்பட்டதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மீட்டுக் கொள்ள கூறப்பட்ட  Mie Sedaap கொரியன் ஸ்பைசி சூப் மார்ச் 17, 2023 அன்று காலாவதியாகும். அதே சமயம் Mi Sedaap கொரியன் ஸ்பைசி சிக்கன் காலாவதி தேதி மே 21, 2023 அன்று இருந்தது. கொரிய ஸ்பைசி சூப் சுவையுடைய உடனடி நூடுல்ஸ் மலேசியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டாலும், சிங்கப்பூரில் திரும்ப அழைக்கப்பட்டதைப் போன்ற காலாவதித் தேதி இங்குக் கிடைக்கும் தொகுதிகளுக்கு இல்லை என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சகம் சந்தையில் உள்ள தயாரிப்புகளை தொடர்ந்து கண்காணிக்கும் மற்றும் அனைத்து சர்வதேச நுழைவு புள்ளிகளிலும் (நாட்டிற்குள் நுழையும் தயாரிப்புகள்) சோதனை செய்யும் என்று நூர் ஹிஷாம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் தயாரித்த உடனடி நூடுல்ஸை உட்கொள்வதில் அக்கறை உள்ளவர்கள் அருகில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தை அணுகலாம் அல்லது அமைச்சகத்தை அதன் இணையதளம் அல்லது அதன் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு பிரிவின் பேஸ்புக் பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

ETO என்பது புற்றுநோயை உண்டாக்கும் இரசாயன வாயு கலவை ஆகும், இது பெரும்பாலும் பூச்சிக்கொல்லிக்காக பயன்படுத்தப்படுகிறது. உணவைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் மேற்பரப்பில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத துப்புரவு முகவர்களில் இது ஒரு  பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

நேற்று, சிங்கப்பூரின் உணவு நிறுவனம், உடனடி நூடுல்ஸில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள் இருப்பதால், தயாரிப்புகளை திரும்பப் பெறுவதாக தெரிவித்தது. அது மற்ற Mie Sedaap தயாரிப்புகளின் ஒழுங்குமுறை சோதனையைத் தொடர்வதாகக் கூறியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here