நாட்டில் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

சிலாங்கூரில் உள்ள எட்டு மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது. கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோல லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

காலை 11.55 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், கோலாலம்பூர், புத்ராஜெயா, பெர்லிஸ் மற்றும் ஏழு மாநிலங்களிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என்று மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இதில் கெடா (லங்காவி, குபாங் பாசு, கோத்தா செத்தார், யான் மற்றும் கோல மூடா, பேராக் (முஅலிம்), தெரெங்கானு (கோல நெரஸ், குவாலா தெரெங்கானு மற்றும் மராங்), பகாங் (பென்டாங்), நெகிரி செம்பிலான் (ஜெலுபு, சிரம்பான், போர்ட் டிக்சன், கோலா) ஆகியவை அடங்கும். மலாக்கா (அலோர் காஜா மற்றும் மலாக்கா தெங்கா) மற்றும் ஜோகூர் (குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here