போலீஸ்காரருக்கு RM50 லஞ்சம் கொடுத்தவருக்கு RM3,000 அபராதம்

ஈப்போ, அக்டோபர் 7 :

கடந்த ஆண்டு போக்குவரத்து போலீஸ் சார்ஜென்ட்டுக்கு RM50லஞ்சம் கொடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட வங்களாதேச தோட்டத் தொழிலாளிக்கு, இன்று இங்குள்ள அமர்வு நீதிமன்றம் RM3,000 அபராதம் விதித்தது.

நீதிபதி அஹ்மட் கமார் ஜமாலுடின், முன்னுலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 30 வயதான கான் ஒபைதுல் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட்ப்போது, அவர் தனது குற்றத்தை ஓப்புக்கொண்டார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது தலைக்கவசம் அணியாததால், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, போலீஸ்காரருக்கு RM50 லஞ்சம் வழங்கியதற்காக நீதிபதி RM3,000 அபராதத்தை விதித்தார்.

ஜாலான் கம்போங் முஹிப்பா, ஆயிர் தவார், மஞ்சாங்கில் மே 11, 2021 அன்று மதியம் சுமார் 2 மணிக்கு குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கான் ஒபைதுல், எந்தவொரு வக்கீலாலும் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை, அவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தினார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை அரசு வழக்கறிஞர் மசியா மன்சோர் இவ்வழக்கினை வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here