ஏஐஏ குழுமத்தின் மேலும் இரு புதிய சுகாதாரக் காப்புறுதித் திட்டங்கள்

நாட்டின் புகழ்பெற்ற காப்புறுதி நிறுவனமான ஏஐஏ (AIA) குழுமம் அவ்வப்போது பல சுகாதாரப் பாதுகாப்பு காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அவ்வகையில் அந்தக் குழுமம் புதிதாக இரு காப்புறுதித் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. A-Life Beyond Critical Care, A-PLUS Total Health எனும் அந்த இரு திட்டங்களுக்கான அறிமுக விழா நேற்று தலைநகரில் நடைபெற்றது.

இந்தக் காப்புறுதித் திட்டங்களை ஏஐஏ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பேன் இங், ஏஐஏ பப்ளிக் தக்காஃபுல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி எல்மி அமான் நஜாஸ், ஏஐஏ குழுமத்தின் மார்க்கெட் பிரிவு தலைமை அதிகாரி எங் ஸீ வாங் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தனர்.

இதில் அறிமுகம் செய்யப்பட்ட A-Life Beyond Critical Care காப்புறுதித் திட்டத்தில் கடுமையான நோய்களுக்கு இறுதிவரை காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.

குறிப்பாக இத்திட்டத்தில் 180 விதிமுறைகளும் உட்படுத்தப்பட்டுள்ளன. கடுமையான நோயினால் பாதிப்புற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் வழி பல்வேறு பயன்களைப் பெறலாம். இந்நிலையில் A-PLUS Total Health காப்புறுதித் திட்டத்தில் தனிநபர் மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுகாதாரக் காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.

குறிப்பாக 6 குடும்ப உறுப்பினர்கள் வரை இந்தக் காப்புறுதித் திட்டத்தைப் பயன்படுத்த வகைசெய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள் சக குடும்பத்தினருடன் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைப் பெற முடிகின்றது.

அதிலும் இத்திட்டம் பிரத்தியேகமாக ஏஐஏ பப்ளிக் தக்காஃபுல் குடும்பத்துடன் இணைந்துள்ளது. அதில் A-Life Ikhtiar எனும் திட்டம் 14 நாட்கள் வயது முதல் 70 வயது வரையிலானவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இரு திட்டங்களுக்கும் விதிமுறைகளோடு மூன்று மாதங்களுக்கான இலவச உறுப்பியம் வழங்கப்படுகிறது. இந்தக் காப்புறுதிக் குடும்பத்தில் பயன்பெறும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது புதிய வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகை வழங்கப்படும்.

இம்மாதம் 5ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்தத் திட்டங்களில் பதிவு செய்து இச்சிறப்புச் சலுகையைப் பெறலாம். நிகழ்ச்சியில் பேசிய பேன் இங், ஏஐஏ குழுமம் பல்வேறு சுகாதாரப் பாதுகாப்புக் காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் புதிய இணைப்பாக இவ்விரு திட்டங்களும் அமைந்துள்ளன.

எங்கள் குழுமத்தின் தூதராகப் பிரபல ஸ்குவாஷ் விளையாட்டாளர் டத்தோ நிக்கோல் டேவிட் இருக்கிறார். இதனால் பலரும் தங்கள் வாழ்க்கையில் சுகாதாரக் காப்புறுதிப் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள முன்னுதாரணமாக அமைகிறோம் எனக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here