கோத்தா கினாபாலு, அக்டோபர் 9:
இங்குள்ள பெனாம்பாங்கில் உள்ள ஜாலான் புண்டுசானில் உள்ள சபா மின்சாரம் Sdn Bhd நிறுவனத்தின் (SESB) மின் துணை நிலையத்திற்கு அருகில், விளம்பர பலகையை பொருத்தும் போது மின்சாரம் தாக்கியதில் இருவர் காயமடைந்தனர்.
26 மற்றும் 25 வயதுடைய இருவரின் வயிறு, கால்கள் மற்றும் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், அவ்விருவரும் அவசர சேவை அம்புலன்ஸ் மூலம் இங்குள்ள குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 9) காலை 11 மணியளவில் பெனாம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தது, அதனடிப்படையிலேயே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.








