கெடா, கிளாந்தான், திரெங்கானு மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

கோலாலம்பூர், அக்டோபர் 10 :

இன்று திங்கட்கிழமை (அக் 10) இரவு 9 மணி வரை கெடா, கிளாந்தான், திரெங்கானு மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கெடாவின், குபாங் பாசு மற்றும் பாடாங் தெராப் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என்றும்; கிளாந்தானில், ஜெலி, தானா மேரா மற்றும் கோலாக்கிராய் ஆகியவை சம்பந்தப்பட்ட பகுதிகளும் ; திரெங்கானுவில் பெசூட், செத்தியூ, கோலா நெராஸ், கோல திரெங்கானு, டுங்கூன் மற்றும் கெமாமன் ஆகிய பகுதிகளும் அடங்கும்.

சரவாக்கில், கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெட்டாங், சரிகேய் (பாகன் மற்றும் ஜுலாவ்), சிபு, கபிட் (பெலகா), மிரி (பேலுரு, தெலாங் உசான், மிரி) ஆகிய பகுதிகளுக்கும் இந்த இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here