பாடாங் தேராப் ஆற்றின் நீர் மட்டம் இன்னும் அபாய அளவை விட அதிகமாக உள்ளது

அலோர் ஸ்டார், அக்டோபர் 10 :

பாடாங் தேராப் மாவட்டத்தில் உள்ள கம்போங் குபுவில் உள்ள பாடாங் தேராப் ஆற்றின் நீர் மடடத்தின் அளவு இன்று இரவு 7 மணி நிலவரப்படி, 13.40 மீட்டராகக் குறைந்துள்ளது, இருப்பினும் அது இன்னும் அபாய அளவை விட அதிகமாகவே உள்ளது என்று மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின், கெடா பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைமைச் செயலகப் பிரிவு மேஜர், முஹமட் சுஹைமி முகமட் ஜைன் தெரிவித்தார்.

மேலும் “கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் உள்ள இன்னும் இரண்டு ஆறுகள் எச்சரிக்கை அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளன, அதாவது தாமான் அமானில் உள்ள அனாக் புக்கிட் ஆறு (2.39 மீ) மற்றும் TAR பாலத்தில் உள்ள அனாக் புக்கிட் ஆறு (1.52 மீ) உயரத்திலும் பதிவாகியுள்ளது என்றார்.

இதற்கிடையில், பல மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வடிந்து வருவதால், பாதிக்கப்பட்ட அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதை அடுத்து, பாலிங்கில் திறக்கப்பட்ட தற்காலிக வெளியேற்ற மையம் இன்று நண்பகல் 1 மணியளவில் முழுமையாக மூடப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here