மாலை 3 மணிக்கு பிரதமரின் சிறப்புரை

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மாலை 3 மணிக்கு சிறப்பு செய்தியை வழங்குகிறார். இன்று அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடக தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு இடுகையில், சிறப்பு உரையை ரேடியோ டெலிவிசியன் மலேசியா (ஆர்டிஎம்), பெர்னாமா டிவி, ஆஸ்ட்ரோ அவானி, டிவி3, டிவிஎஸ் மற்றும் டிவி அல் ஹிஜ்ரா போன்ற உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் ஒளிபரப்பும்.

அதுமட்டுமின்றி, பிரதமரின் முகநூல் பக்கத்திலும் சிறப்புச் செய்தி ‘நேரலை’யில் கிடைக்கிறது. 15ஆவது பொதுத் தேர்தலுக்கு (GE15) வழி வகுக்கும் வகையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கும் சாத்தியக்கூறுகளுடன் இந்த செய்தியை வதந்திகள் இணைத்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here