பத்து ஹம்பாரில் உள்ள சுங்கை மலாக்கா அபாய அளவை தாண்டியுள்ளது

மலாக்கா பத்து ஹம்பாரில் உள்ள சுங்கை மலாக்காவில் நீர்மட்டம் 2.17 மீட்டர் (மீ) ஆக பதிவாகியுள்ளது. இது இன்று காலை 9 மணி நிலவரப்படி 2 மீட்டர் அபாய அளவைத் தாண்டியுள்ளது என்று நீர்ப்பாசன மற்றும் வடிகால் திணைக்களம்  அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. https://publicinfobanjir.water.gov.my/.

மற்ற இரண்டு ஆறுகளும் எச்சரிக்கை அளவை விட அதிகமாகப் பதிவாகியுள்ளன. அதாவது தெலோக் ரிம்பாவில் உள்ள சுங்கை கேசாங், ஜாசின், 3.26 மீ (எச்சரிக்கை நிலை 3.25 மீ) மற்றும் டுயோங்கில் உள்ள சுங்கை துயோங், மலாக்கா தெங்காவில் 1.71 மீ (எச்சரிக்கை நிலை 1.38 மீ). மற்ற இடங்களில், க்ளெபாங் பெசாரில் உள்ள லென்கொங்கன் சுங்கை மாலிமில் நீர்மட்டம் 1.56 மீட்டர் பதிவானபோது எச்சரிக்கை அளவைத் தாண்டியது.

இதற்கிடையில், மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மதியம்  வரை பல மாநிலங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here