தந்தை ஓட்டிச்சென்ற கார் லோரியின் பின்புறம் மோதியதில், குழந்தை மரணம்

செப்பாங், அக்டோபர் 11 :

இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை (KLIA) நோக்கிய ஜாலான் பெசார் ரங்காங்கான் தனா பெலியா (RTB), புக்கிட் சாங்காங் என்ற இடத்தில் தனது தந்தை ஓட்டிச் சென்ற கார், லோரியின் பின்புறத்தில் மோதியதில் அவரது 2 வயதுக்கு குழந்தை இறந்தது.

பந்திங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தங்களுக்கு காலை 10.58 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உட்பட ஐந்து உறுப்பினர்களுடன் காலை 11.16 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.

அவரது கூற்றுப்படி, பெரோடுவா கெலிசா கார், போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்கு அருகில் மூன்று டன் லோரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த மோதலின் விளைவாக, கார் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார், அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட அவரது பிள்ளை பின்னால் வீசப்பட்டார்.

“பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை, சுகாதார அமைச்சின் அதிகாரியால் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை உறுதிசெய்யப்பட்டதுடன் , மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது”.

“பலத்த காயமடைந்த ஓட்டுநரான தந்தை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் வெற்றிகரமாக அகற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here