பினாங்கு மாநில சட்டமன்றத் தொகுதிகளில் 40 விழுக்காடு புதிய முகங்களை களமிறக்க PKR முடிவு

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 11 :

பினாங்கு மாநிலம் சட்டசபையை கலைக்குமா என்பது இன்னும் நிச்சயமற்ற நிலையில், PKR கட்சி குறைந்தபட்சம் 40 விழுக்காடு புதிய வேட்பாளர்களை மாநில சட்டமன்றத் தொகுதிகளுக்கு நிறுத்துவதற்கான திடடமிடல்களை செய்துள்ளது என்று மாநில PKR துணைத் தலைவர் டத்தோ முஹமட் பக்தியார் வான் சிக் தெரிவித்தார்.

மேலும் தமது கட்சி 15வது பொதுத் தேர்தலில் 30 விழுக்காடு பெண்களைக் கொண்ட வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் இப்போது எந்தப் பெயரையும் வெளியிடப் போவதில்லை என்றும் கூறினார்.

“நாங்கள் மொத்தம் 16 இடங்கள் அதாவது PKR இன் 12 இடங்கள்) மற்றும் இரண்டு பெர்சாத்து கட்சியின் இடங்களிலும் (செபெராங் ஜெயா மற்றும் சுங்கை ஆச்சே), அதே போல் தெலுக் பஹாங் மற்றும் பெர்தாம் ஆகிய இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார்.

பினாங்கு மாநிலத்தில் போட்டியிட வேட்பாளர்களை நாம் அடையாளம் கண்டுவிட்டாலும், இறுதிக் கருத்து இன்னும் தேசியக் கட்சித் தலைமையிடமே உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here