ரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. இந்த சூழலில் உக்ரைனிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும், ரஷியாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்தது. 3 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.15 மணிக்கு தலைநகரின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன.

இதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “உக்ரைன் முழுவதும் நடந்துள்ள குண்டுவெடிப்பால் பலர் இறந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது. பூமியிலிருந்து அகற்ற நினைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here