பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 11 :
15வது பொதுத் தேர்தல் (GE15) தேதி குறித்து விவாதிக்க எதிர்வரும் அக்டோபர் 20 அன்று தேர்தல் ஆணையம் (EC) கூடுகிறது என்று, தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் இன்று செவ்வாய்க்கிழமை (அக் 11) தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும், 15ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்குப்பதிவு நாட்கள் போன்ற முக்கிய தேதிகளை நிர்ணயிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.
புத்ராஜெயாவில் உள்ள மெனாரா SPRல் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்றம் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.









