ஜோ லோ என்னை நஜிப்பிடம் அறிமுகப்படுத்தினார் என்று முன்னாள் வங்கியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்

நஜிப் ரசாக்கின் 1MDB விசாரணையில்,  ஜோ லோ என்று அழைக்கப்படும் தப்பியோடிய தொழிலதிபர் லோ டேக் ஜோ முன்னாள் பிரதமரை தனக்கு அறிமுகப்படுத்தியதாக முன்னாள் ஆம்பேங்க் நிர்வாக இயக்குநர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நஜிப்பின் லாங்காக் டூத்தா வீட்டிற்கு கணக்கு விண்ணப்பப் படிவங்களுக்கான கையொப்பத்தைப் பெறுவதற்காகச் சென்றதாக Cheah Tek Kuang கூறினார்.

நஜிப்பின் வீட்டிற்கு கார்களின் தொடரணியில் தான் பயணம் செய்ததாக முன்னர் கூறிய Cheah, லாங்காக் டூத்தாவிற்கு வந்தபோது, ​​மற்ற கார்களில் ஒன்றிலிருந்து லோ வெளியே வருவதைக் கண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். நான் வீட்டிற்குள் நுழைந்தபோது, ​​லோ என்னை (அப்போதைய) பிரதமருக்கு அறிமுகப்படுத்தினார் என்று தற்காலிக வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராமுக்கு பதிலளித்த அவர், அறிமுகத்திற்குப் பிறகு லோ வெளியேறினார்.

ஸ்ரீ ராம்: நீங்கள் பதட்டமாக இருப்பதாக (நஜிப்பைச் சந்தித்தது) நீதிமன்றத்தில் சொன்னீர்களா?

Cheah: எந்த முக்கிய பிரமுகர்களையும் (VIP) சந்திக்கும்போதும் எனக்கு சங்கடமாக இருக்கும்.

நஜிப் படிவங்களில் கையொப்பமிட்டு முடித்த உடனேயே தான் அங்கிருந்து வெளியேறினேன் என்றார்.

அவர் வெளியேறும் நேரத்தில் லோவின் அங்கு இருந்தாரா பற்றி கேட்டபோது, அவர் (லோ) எங்கே இருந்தாரா என்று எனக்குத் தெரியவில்லை (அறிமுகத்திற்குப் பிறகு). அவர் வீட்டில் இருந்ததாக நான் கருதுகிறேன் என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 2011 மற்றும் டிசம்பர் 2014 க்கு இடையில் தனது ஆம்பேங்க் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரிம2.28 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி நிதி தொடர்பாக அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி செய்ததாக நஜிப் மீது 25 குற்றச்சாட்டுகள் உள்ளன.

நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா முன் விசாரணை தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here