வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீயணைப்புத்துறை ஹெலிகாப்டர்கள் மூலம் உலர் உணவு வழங்கி உதவி

சிபு, அக்டோபர் 12 :

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) ஹெலிகாப்டர் சேவையைப் பயன்படுத்தி, இன்று கபிட்டில் உள்ள புக்கிட் மாபோங் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 140 குடும்பத் தலைவர்களுக்கு உலர் உணவு உதவிகள் வழங்கியது.

புக்கிட் மாபாங் மாவட்ட அதிகாரி, ரோபர்ட் லிமன் டெலி கூறுகையில், மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஒன்பது நீண்ட வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு விமானம் மூலம் உதவிகள் அனுப்பப்பட்டன.

மொத்தம் இரு விமானங்கள் இப்பணியில் ஈடுபட்டதாகவும், முதல் விமானம் சுங்கை தியாவில் உள்ள Rh Umbar Bunsu மற்றும் Rh Ambu ஆகிய பகுதிகளுக்கும் , இரண்டாவது விமானம் Rh James Saka Bujai மற்றும் Rh Ejon Aji பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here