கோலாலம்பூர், அக்டோபர் 13 :
எதிர்வரும் நவம்பர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழையின் மாற்றத்தைத் தொடர்ந்து கிளாந்தான், திரெங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்கள் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக வானிலை ஆய்வாளர், பேராசிரியர் டத்தோ டாக்டர் அசிசான் அபு சாமா தெரிவித்துள்ளார்.
இம்மாநிலங்களின் தாழ்வான பகுதிகள் அல்லது ஆற்றுப் படுகைகளில் வெள்ளம் மோசமாக ஏற்படலாம் என்றும் பருவ மழையானது வழமையை விட பலமான காற்று வீசினால்,மலேசிய தீபகற்பத்தின் மேற்குக் கரையோரம் வரை தொடர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
“வடகிழக்கு பருவமழை காரணமாக, அதிக ஆபத்துள்ள மாநிலங்களாக கிளாந்தான் – கோத்தா பாரு, சுங்கை கோலோக் மற்றும் தும்பாட் போன்றவையும், திரெங்கானுவில் கோல திரெங்கானுவும், அதே சமயம் குவாந்தனில் உள்ள பகாங்கும் வெள்ளத்தில் மூழ்கும் என்றார்.
“பருவமழை காலத்தில் வழக்கத்தை விட வலுவான காற்று இருந்தால், மீசோஸ்கேல் (mesoscale) மேகக் குழுக்கள் உட்புறம் மற்றும் திதிவாங்சா மலைத்தொடருக்கு வீசும். “இது நடந்தால், தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள ஆற்றின் நீர் மட்டம் உயரத் தொடங்கும் இதனால் வெள்ளம் ஏற்படலாம்.
உதாரணமாக, 2014 இல், கிளாந்தான் மட்டுமல்ல, பேராக்கும் அப்போது வெள்ளத்தில் மூழ்கியது,” என்று அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.








