ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக மனைவியைத் தாக்கி, காயம் ஏற்படுத்தியதாக இந்திய வம்சாவளி ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஐந்து மாதங்களுக்குள் தனது மனைவியை இரண்டாவது தடவையாக தாக்கி, காயம் ஏற்படுத்தியதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு எதிராக, இன்று கோலப்பிலா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ரகுபாலன், 46, மீது ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பரில், இதேபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தாம்பின் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனை மற்றும் RM1,500 அபராதம் விதித்தது. ஆனாலும் அவர் அதே குற்றத்தை அவர் இப்போது செய்துள்ளார்,” என்று துணை அரசு வழக்கறிஞர் யாப் சு ஷெங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது உள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 24) தனது மனைவிக்கு காயம் ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 27) மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது.

மாவட்ட நீதிமன்ற நீதிபதி சைபுல் சயோதி முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ரகுபாலன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குற்றச் சாட்டின் அடிப்படையில், அவர் தனது 41 வயது மனைவிக்கு தானாக முன்வந்து காயம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது, அவர் மனைவியின் முகத்தில் குத்தியது மற்றும் அவரது தலையை சுவரில் இடித்ததனால், பாதிக்கப்பட்டவரின் முகம், நெற்றி மற்றும் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டன என்றும், கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி, காலை 9.15 மணியளவில் கெமாஸில் உள்ள தாமான் மோலெக்கில் உள்ள ஒரு வீட்டில் குற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ரகுபாலன் மீது குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, அதே சட்டத்தின் 326A பிரிவின் கீழ் இது தண்டனைக்குரியது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது RM2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ரகுபாலன் தரப்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை, அவர் சர்க்கரை நோயாளியாக இருந்ததால் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார், இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு ஜாமீனை நிராகரித்த நீதிமன்றம், வழக்கை மீண்டும் செவிமடுக்க மே 8-ஆம் தேதியை நிர்ணயித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here