கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி விழா; சிலாங்கூர் மாநில போலீஸ் துணை ஆணையர் சசிகலா சிறப்பு வருகை

விதியை மதியால் வெல்லலாம் என்று கூறுவர். விதி நேரத்தில் நமக்கு மதி(யை) வழங்க பிரபஞ்சத்தின் (இறைவன்) அருள் கிட்ட வேண்டும் என்கின்றனர்  நம் முன்னோர்கள்.  இறைவனுக்கு உகந்த மாதமான இந்த புரட்டாசியில் எம்பெருமானை வழிப்பட்டால் நமக்கு  மதி கிட்டும் என்பது திண்ணம்.

உலகின் முழுவதும் இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாள் ஆலயங்களில் சிறப்பு வழிப்பாடு மற்றும் பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் மிகவும் புகழ் பெற்ற கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்திலும் சிறப்பு ஹோமங்களும்  பூஜைகளும் தினமும் நடைபெற்று வருகிறது. அதிலும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விஷேசமானது.

அந்த வகையில் இன்று ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சிலாங்கூர் மாநில போலீஸ் துணை ஆணையரான DCP டத்தோ சசிகலா தனது கணவருடன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். போலீஸ் துறையில் உயர்ந்த பதவி வகிக்கும் முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here