மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில் சால்மோனெல்லா பக்டீரியா கண்டறியப்பட்டதால், சிங்கப்பூர் அவற்றை சந்தையிலிருந்து திரும்பப் பெறுகிறது

சிங்கப்பூர், அக்டோபர் 15 :

மலேசியாவில் உள்ள பண்ணை ஒன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி முட்டைகளில் உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பதால், அவை சந்தைகளிலிருந்து திரும்பப் பெறப்படுவதாக சிங்கப்பூர் உணவு கட்டுப்பாட்டு நிறுவனம் (SFA) நேற்று வெள்ளிக்கிழமை (அக் 14) தெரிவித்துள்ளது.

ஜோகூர், யோங் பெங்கில் அமைந்துள்ள ஒரு பண்ணையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில் சால்மோனெல்லா என்டிரிடிடிஸ் என்ற பக்டீரியா இருப்பதைக் கண்டறிந்ததாக அந்த நிறுவனம் கூறியது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள முட்டைகளை பச்சையாகவோ அல்லது சமைக்காமலோ உட்கொண்டால், அது வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

குறித்த முட்டைகள் CEJ027 என்ற குறியீடால் அடையாளம் காண முடியும்.

பாதிக்கப்பட்ட முட்டைகளை இறக்குமதி செய்த ஆறு நிறுவனங்களும் அவற்றை நிறுத்திவைக்க அல்லது திரும்பப்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன, அதனைத்தொடர்ந்த்து திரும்பப்பெறுதல் நடவடிக்கை தொடர்கிறது என்று SFA தெரிவித்துள்ளது.

குறித்த பண்ணையிலிருந்து இறக்குமதி தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பண்ணை மாசுபாட்டை சரிசெய்த பிறகு மட்டுமே அத்தடை அகற்றப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியது.

மேலும் முட்டைகளை நன்கு சமைத்துச் சாப்பிடுவது பாதுகாப்பானது, வெப்பம் அன்ஹா பாக்டீரியாவை அழிக்கும் என்று SFA தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here