கோலாலம்பூர்:
மலேசிய வானிலை ஆய்வு மையம், இன்று (ஆகஸ்ட் 1) மாலை 7:00 மணி வரை நாட்டின் 9 மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களில் பலத்த காற்று, கனமழை மற்றும் இடியுடன் கூடிய புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிற்பகல் 3:45 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த வானிலை எச்சரிக்கையில் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக பேராக் (Perak): மஞ்சோங், கிந்தா, பேராக் தெங்கா, கம்பார், பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம், கிளாந்தானில் (Kelantan): தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பாச்சோக், மாச்சாங் மற்றும் பாசிர் பூத்தே, திரெ ங்கானு (Terengganu): கோலா நெருஸ், உலு திராங்கானு, கோலா திராங்கானு, மாராங், டுங்குன் மற்றும் கெமாமான், பகாங்கில் (Pahang): ரவூப், பெந்தோங், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின், நெகிரி செம்பிலான் (Negri Sembilan): ஜெலேபு மற்றும் சிரம்பான். அத்தோடு சிலாங்கூர், கோலாலம்பூர் & புத்ராஜெயா: சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் கோலாலம்பூர், புத்ராஜெயா கூட்டரசுப் பகுதிகள் முழுமையாக இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஜோகூர் (Johor): தாங்காக்கில், சிகாமாட், மூவார், பத்து பஹாட், குளுவாங், மெர்சிங் மற்றும் பொந்தியான், சரவாக் (Sarawak): பெத்தோங் (சாராத்தோக் & கபோங்), சாரிகேய், சிபு (கனோவிட்), மூக்கா (தஞ்சோங் மானிஸ் & டாரோ), கபிட் (சோங்), மிரி (பெலுரு & தெலாங் உசான்) மற்றும் லிம்பாங் மற்றும் சபா (Sabah): உள்நாட்டுப் பிரிவு (தம்பாunan), மேற்குக்கரை (West Coast) மற்றும் கூடாட் (கோத்தா மருடு).
இடியுடன் கூடிய கனமழையின் போது திடீர் வெள்ளப்பெருக்கு (Flash floods) மற்றும் பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
























