நாட்டின் மூன்று மாநிலங்களுக்கு நாளை வரை தொடர் மழை எச்சரிக்கை – மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர், அக்டோபர் 17 :

சரவாக், சபா மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் நாளை வரை தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 8.10 மணிக்கு வெளியிடப்பட்டமலேசிய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, சரவாக்கைப் பொறுத்தவரை, பிந்துலு, மிரி (சுபிஸ், பெலுரு மற்றும் மாருடி) மற்றும் லிம்பாங் பகுதிகளும், அதே சமயம் சபாவில், (சிபிடாங், தேனோம், கோலா பென்யு, பியூஃபோர்ட், கெனிங்காவ் மற்றும் தம்புனன்) மற்றும் மேற்கு கடற்கரை மற்றும் கூடாட் ஆகிய பகுதிகளிலும் இந்த வானிலை நிலவும் என்று அது தெரிவித்துள்ளது.

இந்த வானிலையில் ஒரு பகுதியாக ஆறு மணி நேரத்திற்கும் மேலாக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதைத் தொடர்ந்தே, இந்த தொடர்ச்சியான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here