லங்காவியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 43 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

லங்காவி, அக்டோபர் 17 :

நேற்றிரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அவர்களது வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததையடுத்து, அங்குள்ள 11 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 43 பேர் இங்குள்ள பாடாங் மாட்சிராட்டின் டேவான் சைஃபாவில் உள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஷரிமான் ஆஷாரி கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கம்போங் லிம்புங் புத்ரா, கம்போங் புலு பென்யூம்பிட் மற்றும் கம்போங் அட்டாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

மேலும் கம்போங் புலு பென்யும்பிட், குவாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் வீடு ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நேற்று பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்த மற்ற பகுதிகளில் பிற்பகலுக்குப் பிறகு வெள்ள நீர் படிப்படியாக குறைந்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதிகளில் மொத்தம் நான்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் சில சாலைகள் போக்குவரத்தூக்கு தடை செய்யப்பட்டன, அத்தோடு குனுங் ராயாவுக்கு செல்லும் சாலை மூடப்படுவது தொடர்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது என்று ஷரிமான் கூறினார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் அவ்வப்போது நிலைமையை கண்காணிப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்த்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here