லோரி மோதி இருவர் எரிந்து உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு தடுப்புகாவல்

ஜோகூர் பாருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு செடெனாக் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் தெற்கு நோக்கி 45.7 கிலோமீட்டர் தொலைவில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில், இருவர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் லோரி ஓட்டுநருக்கு வியாழக்கிழமை வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக 38 வயதான அந்த நபர் இன்று முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் தோக் பெங் இயோவ் தெரிவித்தார்.

இருப்பினும், விபத்தில் கருகி இறந்த இரண்டாவது பலியானவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. இரண்டாவது உடலை அடையாளம் காண முயற்சிக்கிறோம் என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

சனிக்கிழமை (அக்டோபர் 15) இரவு 7.47 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 28 வயதான நூருல் நஜிஹா மற்றும் மற்றொரு நபரும் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் தப்பினர்.

பெண் தனது புரோட்டான் வைரா காரில் இருந்த  நிலையிலும் மற்றவர் எரிக்கப்பட்ட நிலையில் டொயோட்டா வியோஸில் காணப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here