தீபாவளியை முன்னிட்டு ஆட்டிறைச்சி, தக்காளி, சிவப்பு மிளகாய் உட்பட 8 பொருட்களுக்கு உச்ச வரம்பு விலை நிர்ணயம்

கோலாலம்பூர், அக்டோபர் 17 :

தீபாவளியை முன்னிட்டு 8 பொருட்களுக்கு உச்ச வரம்பு விலையை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இறக்குமதி செய்யப்பட்ட எலும்புகலந்த ஆட்டிறைச்சி, தக்காளி, சிவப்பு மிளகாய் மற்றும் தேங்காய், தேங்காய் துருவல், இந்திய வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் ஆஸ்திரேலிய பருப்பு என்பன இந்த உச்ச வரம்பு விலைப்பட்டியலில் அடங்கும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த உச்ச வரம்பு விலை எதிர்வரும் அக்டோபர் 20 முதல் 26 வரை அமலுக்கு வருகிறது.

நுகர்வோர் https://www.kpdnhep.gov.my என்ற உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் இணையதளம் மூலம் விலைச் சரிபார்ப்புகளைச் செய்யலாம் என்றார்.

இதற்கிடையில், அக்டோபர் 12 முதல் கோழி மற்றும் கோழி முட்டைகள் விலைக் கட்டுப்பாட்டுப் பொருட்களாக இருப்பதாக அஸ்மான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here