பினாங்கு பாலத்தில் இருந்து குதித்ததாக நம்பப்படும் கர்ப்பிணிப் பெண், மீன்பிடி படகு ஓட்டுநரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

ஜார்ஜ்டவுன், அக்டோபர் 18 :

நேற்று, பினாங்கு பாலத்தில் இருந்து குதித்ததாக நம்பப்படும் கர்ப்பிணிப் பெண்ணை பாதுகாப்பாக மீட்டது தனக்கு சந்தோசமாளிப்பதாக மீன்பிடி படகு ஓட்டுநர் முகமட் சோப்ரி கரீம், 37, கூறினார்.

பிற்பகல் 6.45 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாலத்தின் நடுப்பகுதியில் இருந்து நான்கு மீனவர்களை அழைத்துக் கொண்டு, அந்தப் பகுதி வழியாகச் செல்லும் போது, திடீரென்று படகிற்கு முன்னால் பாலத்திலிருந்து ஏதோ விழுந்ததைக் கண்டோம்.

“பாதிக்கப்பட்டவர் மூழ்கிய பிறகு, அவர் நீரோட்டத்தால் நீருக்கு மேலே தள்ளப்பட்டார், உடனே தான், நான்கு மீனவர்களின் உதவியுடன், அந்தப் பெண்ணை மீட்டு படகில் ஏற்றியதாக அவர் கூறினார்.

” பின்னர் பத்து உபான் கடல்சார் போலீஸ் படகுத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, முகமட் சோப்ரி டிக்டோக்கில் பதிவேற்றிய 19 வினாடிகள் கொண்ட வீடியோவும், பெண் மீட்கப்பட்டதைக் காட்டும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலானது.

மீட்கப்பட்டவர் 20 வயதிற்குட்பட்ட பெண் என்றும் அவர் ஆறு அல்லது ஏழு மாத கர்ப்பமாக இருப்பதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

“அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் மற்றும் அவரது வயிற்றில் உள்ள குழந்தையும் பாதுகாப்பாக உள்ளது, இரண்டு உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததையிட்டு தான் மிகவும் சந்தோஷமடைவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here