80 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான புத்தக அச்சிடும் திட்டத்துடன் எனக்கு தொடர்பா? ராட்ஸி ஜிடின் மறுப்பு

 மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (MACC) விசாரணையைத் தூண்டிய J-Qaf புத்தக அச்சிடும் திட்டத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் மறுத்தார். 80 மில்லியன் ரிங்கிட் திட்டத்திற்கான நேரடி பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் மூத்த அமைச்சர் மறுத்தார்.

எனது மனைவி ATR One & Only Enterprise  என்ற நிறுவனத்தின் மூலம் ப்ராக்ஸியாக செயல்பட்டதாகவும், அவர் தெங்கு பட்டத்துடன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் குற்றச்சாட்டுகளில் (சமூக ஊடகங்களில்) கூறப்பட்டது.

J-Qaf பாலர் புத்தகங்களை அச்சிடுவதில் என்னையும் என் மனைவியையும் இணைத்த அந்த செய்திகளில் வீசப்பட்ட இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்  என்று அவர் சனிக்கிழமை (செப்டம்பர் 23) முகநூலில் கூறினார்.

அவர் தனது மனைவி எந்த அரச குடும்பத்தையும் சேர்ந்தவர் அல்ல என்றும், தனக்கும் தனது மனைவிக்கும் மேற்கூறிய நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். நிறுவனத்தில் தங்கள் சொந்த தேடல்களை மேற்கொண்ட எவருக்கும் இந்த விஷயம் மிகவும் தெளிவாக உள்ளது என்று அவர் கூறினார்.

புத்தகம் அச்சிடுவதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர் கூறினார். நான் நேரடியாகவோ அல்லது பிறர் மூலமாகவோ, எந்த வடிவத்திலும் லஞ்சம் அல்லது கிக்பேக் எதுவும் எந்த தரப்பினரிடமும் கேட்டதில்லை அல்லது பெற்றதில்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

தனது முன்னாள் அரசியல் செயலாளர் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார். செப்டம்பர் 19 அன்று நாடாளுமன்றத்தில் நான் கூறிய அறிக்கையின் காரணமாக எம்ஏசிசி அவர்களுக்கு மேலே உள்ளவர்களின் உத்தரவின் பேரில் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.

மேலும், ‘வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனுப்பப்பட்டதன் நோக்கம் எனது, நற்பெயரையும் அழிப்பதும், அப்பாவியான எனது முன்னாள் அதிகாரியை ஒடுக்குவதும் தான் என்பதும் தெளிவாகிறது என தெரிவித்த அவர், இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

80 மில்லியன் ரிங்கிட் புத்தக அச்சிடும் திட்டம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் அரசியல் செயலாளரும், நிறுவன உரிமையாளரும் கைது செய்யப்பட்டதாக சனிக்கிழமை முன்னதாக, எம்ஏசிசி வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here