மனைவிகளுக்கு இடையிலான சண்டை; 4வது மனைவியை பாராங் கத்தியால் காயப்படுத்தியதாக 3வது மனைவி மீது குற்றச்சாட்டு

கோலாப் பிலா, அக்டோபர் 18 :

ஆடவர் ஒருவரின் நான்காவது மனைவியை பாராங் கத்தியால் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், அவரது மூன்றாவது மனைவி மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றப்பத்திரிகையின்படி, சிலாங்கூரில் உள்ள பூச்சோங்கைச் சேர்ந்த Ruslyzay Shawaratuaini Che Roslan, 36, FELDA Lui Timur இல் உள்ள ஒரு வீட்டில், கடந்த அக்டோபர் 15ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் 41 வயதுப் பெண் ஒருவரை வேண்டுமென்றே காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324 இன் படி குற்றம் சாட்டப்பட்டது மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326 A உடன் சேர்த்து படிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் தன் மீதான குற்றச்சாட்டுகளைப் புரிந்துகொண்டு, நீதிபதி நார்மா இஸ்மாயில் முன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அனால் பின்னர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

இவ்வழக்கில் நீதிபதி நார்மா ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM10,000 ஜாமீன் விதித்தார், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை இடையூறு செய்யக்கூடாது என்றும் அவரது அனைத்துலக பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

வழக்கை மீண்டும் குறிப்பிடுவதற்கு அடுத்த டிசம்பர் 5 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது, அத்தோடு குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here