கனடாவில் கைத்துப்பாக்கி வாங்கவும், விற்கவும் தடை..!

ஒட்டாவா, அக்டோபர் 22 :

கனடாவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை செய்தல், வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடுமுழுவதும் தடைவிதிக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமல் படுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதித்து வருகின்றனர், இருப்பினும் இந்த புதிய மசோதாவில் கைத்துப்பாக்கி முடக்கம் ஒரு “உடனடி நடவடிக்கை” என்று ட்ரூடோ நிர்வாகம் கூறிவந்தது.

இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மக்கள் கொல்லப்படும்போது, ​​மக்கள் பாதிக்கப்படும்போது, பொறுப்பான தலைமை நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். துப்பாக்கிகள் சம்பந்தமாக மீண்டும் பல கொடூரமான சம்பவங்களை உதாரணங்களாக நாங்கள் பார்த்திருக்கிறோம்.. மக்கள் இனி கனடாவிற்குள் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது. மேலும் அவர்கள் புதிதாக வாங்கிய கைத்துப்பாக்கிகளை நாட்டுக்குள் கொண்டு வர முடியாது” என்று அவர் கூறினார்.

இதனிடையே துப்பாக்கிகள் மீது கடுமையான சட்டங்களை வைப்பது, துப்பாக்கி வன்முறையை குறைக்காது என்று துப்பாக்கி உரிமைகளுக்கான கனடா கூட்டணி குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here