பெரோடுவாவின் புதிய அறிமுகம் ‘Traz SUV : RM76,100 முதல் RM82,000 வரை விலையிடப்பட்டுள்ளது

கோலாலம்பூர்:

மலேசியாவின் முன்னனி வாகன உற்பத்தி நிறுவனமான பெரோடுவா, தனது புதிய மாடலான ‘Traz’ எஸ்யுவி ரக காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐந்து பேர் அமரக்கூடிய இந்த நகர்ப்புற எஸ்யுவி, காப்பீடு இல்லாமல் RM76,100 முதல் RM82,000 வரை விலையிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள அரூஸ் (Aruz) மற்றும் அற்றிவா (Ativa) மாடல்களுக்கு இணையாக, நகர்ப்புற ஓட்டுநர்கள் மற்றும் குடும்பங்களாக பயணிப்போரைக் கவரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் RM563.3 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இந்த மாடல், சிலாங்கூர் ரவாங்கில் உள்ள உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

Perodua Traz: B-segment SUV with 1.5L engine and 471L boot, priced from RM76 ,100 - SoyaCincauஇதன் சிறப்பம்சமாக, காரின் 95 சதவீத பாகங்கள் உள்ளூர் தயாரிப்புகள் ஆகும். இதன் மூலம் இந்த ஆண்டு உள்ளூர் கொள்முதல் RM11 பில்லியனைத் தாண்டும் என்றும், வரும் ஆண்டுகளில் இது RM11.5 பில்லியனாக உயர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரும் பங்களிக்கும் என்றும் பெரோடுவா தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ ஜைனல் அபிதின் அகமட் தெரிவித்தார்.

இந்த மாத இறுதியில் 1,000 யூனிட்களும், வரும் ஜனவரி மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு 1,900 யூனிட்களும் விற்பனையாகும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது. மலேசிய ஓட்டுநர் சுழற்சி முறைப்படி (MDC), ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 21.3 கிலோமீட்டர் மைலேஜ் தரும் திறன் கொண்ட இந்த கார், எளிய முறையில் வடிவமைக்கப்பட்ட (Engineered Simply) இயந்திரம் மற்றும் பயனர்களுக்கு மிகவும் வசதியான அனுபவத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ‘Traz’ மாடலில் நவீன வசதிகளாக கால்களைக் கொண்டு திறக்கக்கூடிய பின்புறக் கதவு (Power back door with kick sensor) மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த கார் கிரான்பெர்ரி ரெட், எலக்ட்ரிக் ப்ளூ, கிளிட்டரிங் சில்வர், ஐவரி ஒயிட் மற்றும் கிரானைட் கிரே ஆகிய கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. தீபகற்ப மலேசியாவில் இதற்கான விநியோகம் உடனடியாகத் தொடங்குகிறது என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here