கைவிடப்பட்ட படகில் சியாபு அடங்கிய மூன்று பொட்டலங்கள் கண்டெடுப்பு

கோத்தா கினாபாலு, அக்டோபர் 26 :

நேற்று இரவு 10 மணியளவில், சுதேரா துறைமுகத்திற்கு வடமேற்கே 0.20 கடல் மைல் தொலைவில் மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவின் ரோந்துக் குழுவினர் நடத்திய சோதனையில், அங்கு நின்ற கைவிடப்பட்ட படகு ஒன்றிலிருந்து சியாபு போதைப்பொருள் அடங்கிய மூன்று பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சபா மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேச கடல்சார் அமலாக்கப் பிரிவு இயக்குனர், டத்தோ முகமட் ரோஸ்லி அப்துல்லா கூறுகையில், தமது பிரிவினர் வழமையாக மேற்கொள்ளும் ரோந்து பணியின் போது, ​​சுதேரா துறைமுக திசையில் இருந்து சந்தேகத்திற்கிடமான மற்றும் இருண்ட நிலையில் ஒரு படகு நகர்வதை செயல்பாட்டுக் குழு கண்டறிந்தது.

“உடனடியாக படகை நெருங்கி பார்த்தபோது, ​​படகில் யாரும் இல்லை, அனால் அதிகாரிகள் அங்கு வருவதை உணர்ந்த படகோட்டி, கடலில் குதித்திருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் கூறினார்.

“படகை ஆய்வு செய்ததில், ஒரு கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70 கிராம் எடையுள்ள சியாபு வகை போதைமருந்துகளின் மூன்று பொட்டலகள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here