நடிகை பூர்ணா திருமணம்

பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான பூர்ணா, தொடர்ந்து அருள்நிதியின் தகராறு, சசிகுமாரின் கொடிவீரன் மற்றும் கந்த கோட்டை, துரோகி, ஆடு புலி, காப்பான், சவரக்கத்தி, விசித்திரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தலைவி படத்திலும் நடித்து இருந்தார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

பூர்ணாவுக்கும், துபாய் தொழில் அதிபர் சானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்த சடங்குகள் நடந்தன. அப்போதே திருமணம் முடிந்து விட்டதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் பூர்ணா, சானித் ஆசிப் அலி திருமணம் துபாயில் நேற்று நடந்தது. திருமண புகைப்படங்களை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். பூர்ணாவுக்கு திரையுலகினர் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here