நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: வாக்காளர்களின் வசதிக்காகக் கூடுதலான KTM மற்றும் ETS ரயில் சேவைகள் அறிவிப்பு!

கோலாலம்பூர்:

ரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களின் பயண வசதிக்காக ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை 3 நாட்களுக்குக் கூடுதல் KTM மற்றும் ETS ரயில் சேவைகளை வழங்கவுள்ளதாக KTMB அறிவித்துள்ளது.

வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தடையின்றி நெகிரி செம்பிலான் திரும்புவதை உறுதிசெய்ய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் KTMB தெரிவித்தது.

வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) 18 கூடுதல் பயணங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆகஸ்ட் 1 & 2) 18 கூடுதல் பயணங்களும் இயக்கப்படும். அதேநேரம் பத்து கேவ்ஸ் – பூலாவ் செபாங் – பத்து கேவ்ஸ் (Batu Caves–Pulau Sebang–Batu Caves) ஆகிய வழித் தடங்களில் 10 கூடுதல் ரயில் பயணங்களும், தஞ்சோங் மாலிம் – போர்ட் கிள்ளான் – தஞ்சோங் மாலிம் (Tanjung Malim–Port Klang–Tanjung Malim) வழித்தட்ங்களில் 8 கூடுதல் பயணங்களும் இயக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்த 3 நாட்களில் வழக்கமான சேவைகள் மூலம் 1,90,400 பயணிகளும், கூடுதல் சேவைகள் மூலம் 43,200 பயணிகளும் என ஒட்டுமொத்தமாக 2,33,600 பயணிகள் பயணிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சோங் மாலிம் – போர்ட் கிள்ளான் பாதையில் பயணிப்பவர்கள் சிரம்பான் மற்றும் பூலாவ் செபாங் நிலையங்களுக்குச் செல்ல கேஎல் சென்ட்ரல் (KL Sentral) ரயில் நிலையத்தில் ரயில்களை மாறிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here