புற்றுநோயை ஏற்படுத்தும் பென்சீன் என்ற இரசாயனம் கலப்பு ; தனது தயாரிப்புகளை திரும்ப பெறுகிறது யுனிலிவர்

கோலாலம்பூர், அக்டோபர் 27:

யுனிலிவர் நிறுவனத்தின் தயாரிப்புக்களில் ஒன்றான உலர் ரக ஷாம்புக்களில் பென்சீன் என்ற ஆபத்தான வேதிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், புற்றுநோய் ஏற்படும் என்று அமெரிக்காவின் எஸ்டி அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன்பு வரை தனது தயாரிப்புகளில் புற்றுநோயை விளைவிக்கும் பென்சீன் கலந்துவிட்டதாகக் கூறி, அவற்றை அமெரிக்க சந்தைகளில் இருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.

அந்த வகையில், அக்டோபர் 2021 வரை தயாரிக்கப்பட்ட Dove , Nexuss ,Sueve , Tressme, Trigi போன்ற ஸ்ப்ரே செய்து பயன்படுத்தப்படும் உலர் ரக ஷாம்புக்களை சந்தையில் இருந்து நிறுவனம் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே Pantene போன்ற பிரபலமான ஷாம்புக்கள் சந்தையில் இருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here