RM3,000 லஞ்சம் பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட தீயணைப்பு வீரர் அதை மறுத்து விசாரணை கோரினார்

ஷா ஆலாம், அக்டோபர் 27 :

இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு RM3,000 லஞ்சம் கேட்டு வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் இன்று தான் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.

மண்டலம் 3 போர்ட்கிள்ளான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் துணை தீயணைப்பு கண்காணிப்பாளராக இருந்த முகமட் நோர் அப்துல்லா, 38, என்ற குற்றஞ்சாட்டப்பட்டவர், கிள்ளான் மாநகர சபை மூலம் ஒரு நிறுவனத்திற்கு வணிக உரிமம் வழங்க பரிந்துரை செய்ய லஞ்சம் கேட்டு, லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இரு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார்.

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2021 அன்று ஆகிய தினங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இந்தக் குற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (MACC) சட்டம் 2009 இன் பிரிவுகள் 16 (a) (B) மற்றும் 17 (a) ஆகியவற்றின் கீழ் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது, மேலும் அதே சட்டத்தின் பிரிவு 24 (1) இன் கீழ் அது தண்டனைக்குரியது.

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் லஞ்சத்தின் மதிப்பில் ஐந்து மடங்குக்கு குறையாத அபராதம் அல்லது RM10,000 அல்லது எது அதிகமோ அது தண்டனையாக விதிக்கப்படலாம்.

இந்த வழக்கில் நீதிபதி ரசிஹா கசாலி, ஒரு உத்தரவாதத்துடன் RM8,000 மதிப்புள்ள ஜாமீன் வழங்க அனுமதித்ததுடன், எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி வழக்கை குறிப்பிடும்படி நிர்ணயித்தார்.

மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட முஹமட் நோர் ஒவ்வொரு மாதமும் சிலாங்கூர் MACC அலுவலகத்தில் ஆஜராகுமாறும், அவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது புதுப்பிக்கவோ அனுமதியில்லை என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here