உரக்கடையில் ஏற்பட்ட தீயில் ஆடவருக்கு உடல் முழுவதும் தீக்காயம்

கோத்த கினபாலு: லஹாட் டத்துவில் உள்ள  ஒருஉரக் கடையில்  இன்று (அக் 31) ஏற்பட்ட தீ விபத்தில் 41வயது நபர் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்தார். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள்   தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய தொழிலாளி நசாருடின் சிலேலே, லஹாட் டத்து மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

ஜாலான் ஜெரோகோ பத்து 13 இல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிற்பகல் 3.42 மணியளவில் ஒரு புகார் வந்தது. அதில் ஒரு தற்காலிக கடை முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் வேறு யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்த அந்த பகுதியைச் சுற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டது.

மாலை 4.40 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மாலை 5 மணிக்கு நடவடிக்கை முடிவடைந்தது என்று திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here