மலேசியாவில் ஒரு நாளைக்குச் சராசரியாக 5 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு; வெளியான அதிர்ச்சி தகவல்!

கோலாலம்பூர், பிப்ரவரி 24, 2026:

மலேசியாவில் கடந்த 2015 முதல் 2025 வரையிலான பத்து ஆண்டுகளில், சராசரியாக நாளொன்றுக்கு ஐந்து பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மாநில வாரியான கணக்கீட்டில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது.

நாடாளுமன்றத்தில் கெப்போங் (PH) உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அமைச்சர், பின்வரும் அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார், 2015 – 2025 காலகட்டத்தில் மொத்தம் 17,609 பாலியல் பலாத்கார வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இவற்றில் 7,090 வழக்குகள் நீதிமன்றக் குற்றச்சாட்டுகளாக (Charges) மாற்றப்பட்டுள்ளன என்றார்.

மாநில வாரியான குற்றங்கள் அடிப்படையில் முதலிடத்தில் சிலாங்கூரில் 3,3921,575 வழக்குகளும், அடுத்த நிலையில் ஜோகூரில் 2,006,806 வழக்குகளும், சபாவில் 1,817,505 வழக்குகளும், கெடாவில் 1,465465 வழக்குகளும் பதிவாகின. குறைந்தபட்சமாகப் பெர்லிஸ் மாநிலத்தில் 275 வழக்குகள் பதிவாகி, 116 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளனஎன்று அவர் சொன்னார்.

இதில் பாதிக்கப்பட்ட லோ வாய் முன் என்பவரின் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான சட்டப்பிரிவு 376-லிருந்து (பாலியல் பலாத்காரம்), 354-ஆக (பாலியல் சீண்டல்) குறைக்கப்பட்டது குறித்து லிம் லிப் எங் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், “சட்டப்பிரிவு 376-ன் கீழ் காவல்துறை முறையான விசாரணை நடத்தியது. இருப்பினும், ஒரு குற்றச்சாட்டை மாற்றியமைப்பது அல்லது குறைப்பது என்பது கூட்டரசு அரசியலமைப்பின் 145(3) பிரிவின் கீழ் அரசு தலைமை வழக்கறிஞரின் (Attorney-General) முழு அதிகார வரம்பிற்கு உட்பட்டது. போதிய ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றத்தில் தண்டனையை உறுதி செய்வதற்கான வாய்ப்பு எந்தப் பிரிவில் அதிகம் உள்ளதோ, அதற்கேற்ப இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன” என்று விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here