சேலை, ஜியோங்சாம் அணிவதற்கு தடை விதித்ததற்கு மக்கள் கடும் எதிர்ப்பு: சர்ச்சைக்குரிய ஆடைக் குறியீட்டை மாற்றியமைத்தது UKM

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 31 :

யுனிவர்சிட்டி கெபாங்சான் மலேசியா (UKM ) அதன் பட்டமளிப்பு விழாவிற்கான ஆடைக் குறியீடு வழிகாட்டுதலில் சேலை, ஜியோங்சாம் அணிவதற்கு தடை விதித்திருந்தது, இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால் தற்போது அதன் ஆடைக் குறியீட்டை மாற்றியமைத்துள்ளது.

அதன் இணையதளத்தில் உள்ள புதிய வழிகாட்டுதலின்படி, இப்போது பட்டதாரிகள் தேசிய உடைகளை (baju kebangsaan) அணியலாம் என்று கூறியுள்ளது. இதில் தேசிய உடை என்பதற்கு அது எந்த அறிவுறுத்தல்களையும் தெரிவிக்கவில்லை.

முன்னர் அது வெளியிட்டிருந்த ஆடைக்கு குறியீட்டு வழிகாட்டியில், பெண் பட்டதாரிகள் தேசிய உடை/பாஜு குருங்/லவுஞ்ச் சூட்/நீண்ட கை சட்டை மற்றும் நீண்ட பாவாடை அல்லது கணுக்கால் வரை அடர் நிற கால்சட்டை அணிய வேண்டும் என்று கூறியது.

அத்தோடு பட்டமளிப்பு விழாவின் நெறிமுறைகளுக்குப் பொருத்தமானதாக இருக்குமாறு, ஆண் பட்டதாரிகள் எந்த வகையான தேசிய உடையையும் அணியலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்த ஆடைக் குறியீடு வழிகாட்டுதலில் சேலை மற்றும் ஜியோங்சாம் ஆகிய உடைகள் தடைசெய்யப்பட்டதால், இது பொதுமக்களிடமிருந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானது  குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here