இளம் வாக்காளர்களை கவர பிரசாரக் குழுவை நியமித்தது பா.ஜ.க.

புதுடெல்லி, நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் நேரடி உரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் இளம் தலைமுறையினருடனான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இளைஞர்களை, குறிப்பாக ‘ஜென்-இசட்’ (Gen Z) தலைமுறையினரை சென்றடைவதற்கான பிரத்யேக திட்டத்தை பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது. இதற்காக பா.ஜ.க. சார்பில் சிறப்பு பிரசார குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ‘GEN Z OUTREACH PROGRAMME’ என்ற பெயரில் இளம் வாக்காளர்களைக் கவர்வதற்காக பிரசாரக் குழுவை பா.ஜ.க. தலைமை அமைத்துள்ளது. இந்த குழுவில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, ஹர்ஷ் சங்வி, ஓ.பி.சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here